தர்மபுரி ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை

சுதந்திர தின விழாவை முன்னிட்டு தர்மபுரி ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.
தர்மபுரி ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை
Published on

சுதந்திர தின விழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மேற்பார்வையில் தர்மபுரி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமசாமி, கோதண்டபாணி மற்றும் போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் தர்மபுரி ரெயில் நிலைய நுழைவாயிலில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். அப்போது பயணிகள் கொண்டு வந்த பைகளை சோதனை செய்தனர். மேலும் போலீசார் ஓமலூர் ரெயில் நிலையத்தில் இருந்து மாரண்டஅள்ளி ரெயில் நிலையம் வரை தண்டவாள ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தர்மபுரி வழியாக சென்ற ரெயில்களிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com