ஜவுளி வியாபாரி வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் கைது

பர்கூர் அருகே ஜவுளி வியாபாரி வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டனர். அந்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஜவுளி வியாபாரி வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் கைது
Published on

பர்கூர்:

பர்கூர் அருகே ஜவுளி வியாபாரி வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டனர். அந்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

ஜவுளி வியாபாரி

பர்கூர் அருகே எமக்கல்நத்தம் அருகே சாலிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 41). ஜவுளி வியாபாரி. இவருடய மனைவி பிருந்தா. பிருந்தா விவசாய நிலத்துக்கு சென்று இருந்தார். இவர்களது மகன் தினேஷ் பள்ளிக்கு தேர்வு எழுத சென்று இருந்தார்.

தேர்வு முடிந்த பிறகு மகனை அழைத்துக்கொண்டு சம்பவத்தன்று மதியம் சிவகுமார் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

ஒருவர் சிக்கினார்

வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு மர்மநபர் ஒருவர் அலமாரியை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்ததை கண்டு சிவகுமாரும், அவருடைய மகனும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நபர், தந்தை- மகன் இருவரும் தாக்க முயன்றதுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

அதற்குள் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். தப்பி செல்ல முயன்ற அந்த நபரை பிடித்து பர்கூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

வாலிபர் கைது

விசாரணயைல், அவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு பிலிகேஹள்ளியை சேர்ந்த ராஜூ (45) என்பதும், அவர் சிவகுமார் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. உடனே போலீசார் ராஜூவை கைது செய்தனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com