தைப்பூசம் விழா: தாம்பரம் - செங்கோட்டை ரெயில் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்

தாம்பரம் - செங்கோட்டை இடையே இயக்கப்படும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெயில்
கோப்புப்படம்
Published on: 

சென்னை,

இருமுடி மற்றும் தைப்பூசம் விழாவையொட்டி, தாம்பரம் - செங்கோட்டை இடையே இயக்கப்படும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இருமுடி மற்றும் தைப்பூசம் விழாவை முன்னிட்டு ஜனவரி 1-ந்தேதி முதல் ஜனவரி 22-ந்தேதி வரை தாம்பரம் - செங்கோட்டை இடையே இயக்கப்படும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்கள் 20683/20682) தற்காலிகமாக மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.

அதன்படி, தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் ரெயில் (20683) 2027 ஜனவரி 3, 5, 7, 10, 12, 14, 17, 19, 21 ஆகிய தேதிகளிலும், செங்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கு செல்லும் ரெயில் (20682, சிலம்பு எக்ஸ்பிரஸ்) 2027 ஜனவரி 2, 3, 7, 9, 10, 14, 16, 17, 21 ஆகிய தேதிகளிலும் மேல்மருவத்தூரில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X