

சென்னை,
இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
விழுப்புரத்தில் இருந்து பிப்ரவரி 1, 2, 3-ந் தேதிகளில் காலை 9.05 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் புறப்பட்டு காலை 11.20 மணிக்கு கடலூர் துறைமுகத்தை அடைகிறது.
பின்னர், கடலூர் துறைமுகத்தில் இருந்து குறிப்பிட்ட 3 நாட்களும் பகல் 11.30 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் புறப்பட்டு மதியம் 1 மணிக்கு விருத்தாசலத்தை சென்றடைகிறது.
8 பெட்டிகள் கொண்ட இந்த சிறப்பு ரெயில் விருத்தாசலம், ஊத்தாங்கால் மங்களம், நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மறுமார்க்கத்தில், விருத்தாசலத்தில் இருந்து பிப்ரவரி 1, 2, 3 ஆகிய தேதிகளில் பகல் 1.20 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் மதியம் 2.40 மணிக்கு கடலூர் துறைமுகத்தை வந்தடையும். பின்னர், குறிப்பிட்ட 3 நாட்களும் கடலூர் துறைமுகத்தில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் மாலை 5.15 மணிக்கு விழுப்புரத்தை சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.