தக்கோலம் பேரூராட்சி கூட்டம்

தக்கோலம் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது.
தக்கோலம் பேரூராட்சி கூட்டம்
Published on

தக்கோலம் பேரூராட்சியில் கூட்டம் தலைவர் எஸ்.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் மாதேஸ்வரன் மற்றும் துணைத்தலைவர் கோமளா ஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சங்கீதா நகரில் ஆழ்துளை கிணறு, அலுவலக பதிவறை, கழிப்பறை ஆகிய திட்டப்பணிகளுக்கு அங்கீகாரம் வழங்கியும், தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய சாலைகளின் பெயர்களை அரசாணை பெறுவதற்காக சம்பந்தப்பட்ட துறைக்கு கடிதம் அனுப்புதல் மற்றும் மனைகள் வரன்முறை படுத்தும் கால நீடிப்பு, பேரூராட்சி சாலைகளில் அதிக எடை கொண்ட லாரிகள் செல்ல தடை விதிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளநிலை எழுத்தர் சொக்கலிங்கம் நன்றி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com