தளவாய் சுந்தரத்திற்கு அ.தி.மு.க.வில் மீண்டும் பொறுப்பு

தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.வுக்கு அ.தி.மு.க.வில் மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் தளவாய் சுந்தரத்தை மீண்டும் நியமனம் செய்வதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான என். தளவாய்சுந்தரம் அவர்கள், கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட காரணத்தால், அதுசம்பந்தமாக உரிய விளக்கம் கேட்டு, 8.10.2024 அன்று அவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார்.

தளவாய்சுந்தரம் அவர்கள், அந்நிகழ்வில் கலந்துகொண்டது சம்பந்தமாக வருத்தம் தெரிவித்து தலைமைக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் என். தளவாய்சுந்தரம், B.Sc., B.L., M.L.A., அவர்கள் (முன்னாள் அமைச்சர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com