முதல்-அமைச்சர் விஜய்க்கு தங்கம் தென்னரசு வாழ்த்து

'நிதி இல்லை' போன்ற காரணங்களை தேடாமல் ஆக்கபூர்வமான நிர்வாகத்தில் கவனம் செலுத்தி தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவதே சரியாக இருக்கும் என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளர்.
முதல்-அமைச்சர் விஜய்க்கு  தங்கம் தென்னரசு வாழ்த்து
Published on

சென்னை,

தமிழகத்தின் 13-ஆவது முதல்-அமைச்சராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் இன்று காலை 10.15 மணியளவில் பதவியேற்றார். தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதல்-அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின்னர், 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்தநிலையில் சென்னை தலைமைச்செயலகம் வந்த முதல்-அமைச்சர் விஜய் முறையாக பதவியேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து அரசின் கோப்புகளில் கையெழுத்திட்டார்.

முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ் நாட்டின் மாண்புமிகு முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துகள்!

கழக தலைவர் அண்ணன் மு.க.ஸ்டாலின் நிதி நெருக்கடிகளையும் பேரிடர்களையும் திறம்பட கையாண்டு, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை இரட்டை இலக்க வளர்ச்சிக்கு கொண்டு சென்றதை சான்றாக கொண்டு, மாநிலத்தின் கடனளவு அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பிற்குள்ளேயே இருப்பதையும் உணர்ந்து, தலைவர் சுட்டிக்காட்டி இருப்பதை போல, 'நிதி இல்லை' போன்ற காரணங்களை தேடாமல் ஆக்கபூர்வமான நிர்வாகத்தில் கவனம் செலுத்தி தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவதே சரியாக இருக்கும்.

இதில் அவ்வாறு கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com