தஞ்சாவூர்: மூதாட்டி மண்வெட்டியால் வெட்டிக் கொலை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தஞ்சாவூர் மாவட்டம், பள்ளியக்ரஹாரம் அகிலாம்பாள்பேட்டை பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர், கீரை வியாபாரம் செய்து வந்தார்.
தஞ்சாவூர்: மூதாட்டி மண்வெட்டியால் வெட்டிக் கொலை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம், பள்ளியக்ரஹாரம் அகிலாம்பாள்பேட்டை பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி அம்சு (வயது 72), கீரை வியாபாரம் செய்து வந்தார். நேற்று காலையில் அந்த மூதாட்டி அவரது வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் தஞ்சை கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மூதாட்டி மர்ம நபர்களால் மண்வெட்டி மூலம் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

மேலும் தஞ்சை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை கொலை செய்தது யார்? அவர் ஏன் கொலை செய்யப்பட்டார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com