தஞ்சாவூர்: இடி தாக்கி மீனவர் பரிதாபமாக உயிரிழப்பு

இடி விழுந்த நிலையில் கடலில் வலையில் சிக்கி உயிர் இழந்து கிடந்தது தெரிய வந்தது.
தஞ்சாவூர்: இடி தாக்கி மீனவர்  பரிதாபமாக உயிரிழப்பு
Published on

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஏரிப்புறகரை ஊராட்சி பகுதியைச் சேர்ந்த மறைந்த வைரன் அவர்களின் மகன் காளிமுத்து அவர்கள் மீன்பிடி தொழில் செய்து வந்தார். வழக்கம்போல் இன்று அதிகாலை 5.30 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க( ஊன் வலை) சென்றுள்ளார், இன்று காலை கோடை மழை பெய்து வரும் வேளையில் 6 மணி அளவில் பலத்த சத்தத்துடன் அப்பகுதியில் இடி விழும் சத்தம் கேட்டது.

எனினும் மீன் பிடிக்க சென்ற காளிமுத்துவை காணவில்லை என உறவினர்கள் பார்த்தபோது இடி விழுந்த நிலையில் கடலில் வலையில் சிக்கி உயிர் இழந்து கிடந்தது தெரிய வந்தது. உடனடியாக அதிராம்பட்டினம் கடலோர காவல் படை காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இடி விழுந்து மீனவர் இறந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com