தஞ்சை: வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு!

வீடு புகுந்து பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
தஞ்சை: வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு!
Published on

தஞ்சை,

தஞ்சை செங்கிப்பட்டி அருகே உள்ள பழையகரியப்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் பாபு மனைவி சிவஞானம் (வயது28). இவர் சம்பவத்தன்று இரவு தனது பெற்றோர், தங்கை, தம்பி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து சிவஞானம் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துச்சென்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டுள்ளார். ஆனால் அதற்குள் மர்ம நபர் தங்க சங்கிலியுடன் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இது குறித்து சிவஞானம் செங்கிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com