முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வேடசந்தூ ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
Published on

வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமலைசாமி, பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணைத் தலைவர் தேவசகாயம் வரவேற்றார்.

கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள தகுதி வாய்ந்த மகளிர்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் பல்வேறு துறை அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com