

சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
விவசாயிகளுக்கு வருடந்தோறும் ரூ.6,000 வழங்கும் வகையில் பிரதமரின் விவசாயிகள் கவுரவ நிதியின் 22-வது தவணைத் தொகையாக ரூ.18,640 கோடியை இன்று நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி விடுவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டின் 22 லட்சம் விவசாயிகள் உட்பட நாடு முழுவதுமுள்ள 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் காலந்தவறாது தொடர்ச்சியாக கவுரவ நிதியை வழங்கி வரும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு விவசாயிகள் சார்பாக கோடான கோடி நன்றிகள்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.