தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் திடீர் தர்ணா

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் திடீர் தர்ணா
Published on

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் வளாகம் அருகே நேற்று ஒரு முதியவர் தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் சிட்லக்காரம் பட்டியை சேர்ந்த முருகன் என்பது தெரியவந்தது. அப்போது அவர் கூறுகையில், எங்கள் கிராம பகுதியில் 18 கிராம மக்கள் சேர்ந்து நடத்தும் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நடந்த அன்னதானத்தில் உணவு வாங்கி சாப்பிட சென்ற என்னை அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் தாக்கினார். மேலும் இரவு எனது வீட்டுக்கு வந்த அந்த நபர் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள நீ எப்படி அன்னதானத்தில் சாப்பிடலாம் எனக்கூறி என்னை மீண்டும் தாக்கினார். இது பற்றி தகவல் அறிந்து பாப்பாரப்பட்டி போலீசார் என்னை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போது தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com