‘இதற்கு அதுவே மேல்’... கூட்டணி மாற்றம் குறித்து முத்தரசன் சொன்ன குட்டிக்கதை

இன்றைய சூழ்நிலையில் கொள்கை பிடிப்பு உள்ள ஆட்களே தேவை என்று முத்தரசன் கூறினார்.
‘இதற்கு அதுவே மேல்’... கூட்டணி மாற்றம் குறித்து முத்தரசன் சொன்ன குட்டிக்கதை
Published on

திருவாரூர்,

திருவாரூரில் முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்ல திருமண விழாவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் பேசியதாவது:-

சட்டமன்றத்தில் அப்பாவை காணோம் என முதல்-அமைச்சர் விஜய் பேசியிருக்கிறார்; யாரையும் யாரும் காணாமல் ஆக்க முடியாது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அன்று போல்தான் இன்றும் இயங்கி வருகிறார். எந்த சோர்வும் இல்லை. தேர்தலுக்கு பிறகு எப்படி இருப்பாரோ என்று நினைத்தேன்; ஆனால் உற்சாகமாகவே இருக்கிறார்.

இன்றைய சூழ்நிலையில் கொள்கை பிடிப்பு உள்ள ஆட்களே தேவை. எங்களுடனான உரையாடல் தொடரும் காவிரி டெல்டாவில் சாகுபடி பொய்த்து பஞ்சம் ஏற்படுமோ என்று விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். ஒருபோக சாகுபடி நடப்பதற்காகவாவது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து தவெக கூட்டணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாறியது குறித்து குட்டிக்கதை ஒன்றை முத்தரசன் கூறினார். அதன் விவரம் பின்வருமாறு:-

“ஆற்றுப் படுகைகளில் ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும்போது திடீரென ‘இக்கரைக்கு அக்கரை பச்சை' என நினைத்து ஒரு ஆடு போகும். பிறகு ஒட்டுமொத்தமாகப் போகும்.. போனபிறகுதான் தெரியும். இதற்கு அதுவே மேல் என.. திரும்பிப்போனால் அந்த ஆற்றுப்படுகை ஏற்றுக்கொள்ளுமா? என தெரியாது.. வந்துவிட்டோம் கொஞ்ச நாள் இருப்போம்.. இதுதான் இன்றைய சூழல்.. நான் பொதுவாகச் சொல்கிறேன்..” இவ்வாறு குட்டிக்கதை கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com