

சென்னை,
தேர்தல் தோல்வி குறித்து நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது
”சமூக வலைதலங்களை சரியாக கையாளாததே நமது தோல்விக்கு காரணம். சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு கடைசி 3 நாட்களில்தான் நாம் வெற்றியை எழந்துள்ளோம். எதன் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெல்ல வேண்டும். சமூக வலைதள செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும். இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தவெகவின் வெற்றி நிலையது அல்ல. அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் நாம்தான் வெற்றி பெறுவோம். தவெக நமக்கு எதிரி அல்ல திமுகதான் நமக்கு உண்மையான எதிரி.”
இவ்வாறு அவர் கூறினார்.