பெரம்பூரில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்த தவெக தலைவர் விஜய்

பெரம்பூரில் உள்ள தவெக தேர்தல் பணிமனை வாசலில் விஜய் விசில் கோலமிட்டார்.
பெரம்பூரில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்த தவெக தலைவர் விஜய்
Published on

சென்னை,

சட்டசபை தேர்தல் அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தவெக தலைவர் விஜய்யும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், பெரம்பூரில் ஜவஹர் நகர் பகுதிக்கு சென்ற விஜய், அங்குள்ள தவெக தேர்தல் பணிமனைக்கு சென்றார். அங்கு, தேர்தல் பணிமனை வாசலில் விசில் கோலமிட்டார். இதன் பின்னர், அருகில் உள்ள வீடுகளுக்கு சென்ற விஜய், அங்கிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது தங்களின் குறைகளை நான் நிச்சயம் சரி செய்வேன் என்றும், தனக்கு விசில் சின்னத்தில் வாக்கு செலுத்துமாறும் மக்களிடம் விஜய் கேட்டுக்கொண்டார். விஜய் சென்ற தகவல் அப்பகுதி மக்களுக்கு தெரிய வரவே, கூட்டம் அதிகமானது. இதையடுத்து விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com