பணம் கொடுக்காமல் தவெக வெற்றி பெறும் - அமைச்சர் விஜய் பாலாஜி பேட்டி

விமர்சனம் செய்பவர்கள் செய்து கொண்டுதான் இருப்பார்கள் என அமைச்சர் விஜய் பாலாஜி கூறினார்.
அமைச்சர் விஜய் பாலாஜி பேட்டி
Published on: 

சென்னை,

தவெக பணம் கொடுத்து ஓட்டு வாங்கியதாக சரித்திரம் இல்லை என அமைச்சர் விஜய் பாலாஜி பேட்டி அளித்துள்ளார்.

அமைச்சர் பேட்டி

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக தவெக மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இதனை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ம. விஜய் பாலாஜி மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இடைத்தேர்தல் என்றால் திருமங்கலம் பார்முலா என்று மக்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை உடைத்து, இந்த இடைத்தேர்தலில் ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்காமல், ஆளுங்கட்சியாக இருந்து மிகப்பெரிய வெற்றியை அடைய இருக்கிறோம். அதனால் விமர்சனம் செய்பவர்கள் செய்து கொண்டுதான் இருப்பார்கள். தவெக ஒரு ரூபாய் கூட பணம் கொடுத்து, ஓட்டு வாங்கியதாக சரித்திரம் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com