தாயுமானவர் திட்டம்: தூத்துக்குடியில் வீடுதேடி சென்ற ரேஷன் பொருட்கள்

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை அவர்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு சேர்க்கும் நோக்கில் 'தாயுமானவர் திட்டம்' கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி தொடங்கப்பட்டது.
தூத்துக்குடி
தமிழகம் முழுவதும் 21.7 லட்சத்திற்கும் அதிகமான முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை அவர்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு சேர்க்கும் நோக்கில், 'தாயுமானவர் திட்டம்' கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி தொடங்கப்பட்டது.
இதன்படி மாதந்தோறும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடைகளிலிருந்து அத்தியாவசியப் பொருட்கள் பயனாளிகளின் வீட்டு வாசலில் வழங்கப்படும். இந்த நிலையில் தூத்துக்குடி பகுதியில் நியூ காலனியில் உள்ள ரேஷன் கடை பணியாளர்கள், முதியோர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்களை வழங்கினர்.
Related Tags :
Next Story






