

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சட்டசபையில் இன்று பேசியதாவது: அண்ணாவின் தம்பிகள் எப்படி சட்டமன்றத்தில் இருந்தார்களோ..அதேபோலத்தான் இன்று அண்ணணின் தம்பிகள் சட்டமன்றத்தில் செயல்பட்டு கொண்டு இருக்கிறோம். இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராக இருக்கும் போது தமிழர் கடவுளாகிய தமிழர்களின் அடையாளம் ஆகிய கடவுள் முருகரை பற்றி பேசமல் கடந்துவிட முடியாது.
முருகர் என்று சொன்னாலே சூரசம்ஹாரம் தான் எல்லோருக்கும் நியாபகம் வரும். அந்த சூரன் யார் என்றால், நான் மட்டும்தான் ஆட்சி செய்வேன். நான் மட்டும்தான் நிரந்தர ஆட்சியாளர் மற்ற எல்லோரும் அடிமைகள் என்ற மனநிலையில் இருந்த சூரனை ஒரு சாதாரண பாலகன் கையில் வேல் ஏந்தி வந்து எதிர்த்து நின்றான் அப்போது சூரன் சொன்னாராம்.. இந்த சின்னபையனா என்னை எதிர்த்து போர் செய்ய போகிறான். இந்த சின்ன பையனா என்னை எதிர்த்து வென்றுவிட போகிறான் என்று ஏளனமாக பேசினாராம்.
ஆனால் அந்த சின்ன பையன் தான் வேல் ஏந்தி சூரனுடைய அந்த ஆட்சிக்கு முடிவுரை கொண்டு வந்தார்.. 2026 தேர்தலும் கிட்டத்தட்ட ஒரு சூரசம்ஹாரம்தான். உடனே யாரை சூரன் என்று சொல்கிறேன் என்று யாரும் கூச்சல் போடவேண்டாம். நான் சொல்லும் சூரன் ஊழல், லஞ்சம், மக்களை பிரித்தாளக்கூடிய சாதி அரசியல், மத அரசியல் என்ற சூரனை வீழ்த்தி எங்களுடைய வேலன் ஒரு ஜனநாயக ஆட்சியை தமிழ்நாட்டில் நிறுவியிருக்கிறார்' இவ்வாறு அவர் கூறினார்.