இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து - 3 பேர் பலி

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விபத்து ஏற்பட்டத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து - 3 பேர் பலி
Published on

சென்னை,

லைகா நிறுவனம் தயாரிப்பில் சங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த திரைப்படத்திற்காக சென்னை அருகே பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் ராட்சத கிரேன்கள் மூலம் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று செட் அமைக்கும் பணிகள் நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விபத்து ஏற்பட்டதில் உதவி இயக்குனர் மது, சங்கரின் இணை இயக்குனர் கிருஷ்ணா, உதவி நடன இயக்குனர் சந்திரன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த காவல்துறையினர், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com