அதிமுக தலைமை அலுவலகம் தொண்டர்கள் வருகை இன்றி வெறிச்சோடியது...!

அதிமுக தலைமை அலுவலகம் தொண்டர்கள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
அதிமுக தலைமை அலுவலகம் தொண்டர்கள் வருகை இன்றி வெறிச்சோடியது...!
Published on

சென்னை,

சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ந் தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இருதரப்பினர் மோதல் காரணமாகவருவாய் துறை அதிகாரிகள் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு 'சீல்' வைத்தனர்.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் - ஈபிஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக ஈபிஎஸ்., ஓபிஎஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. மேலும் தொண்டர்கள் அதிமுக அலுவலகத்துக்கு வரக்கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டது.

இந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தொண்டர்கள் ஒரு மாதம் வரக்கூடாது என்ற ஐகோர்ட்டு உத்தரவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலக நுழைவு வாயில் இன்று திறக்கப்பட்டது. நுழைவு வாயில் திறக்கப்பட்ட நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தொண்டர்கள், நிர்வாகிகள் யாரும் வரவில்லை.

தொண்டர்கள் யாரும் வராததால் அதிமுக தலைமை அலுவலகம் ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் அலுவலகத்திற்கு தொண்டர்கள் வர வேண்டாம் என ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com