பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அ.தி.மு.க. நிர்வாகி கைது

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அ.தி.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அ.தி.மு.க. நிர்வாகி கைது
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியை சேர்ந்தவர் வினோத் (வயது 47). இவர், அ.தி.மு.க. நகர கழக செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி சோபியா. இவர் அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்தநிலையில் வினோத் அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

சிறையில் அடைப்பு

இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட வினோத் மீது ஏற்கனவே அரசு வேலை வாங்கித்தருவதாக பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com