குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 4வது நாளாக நீடிப்பு


குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 4வது நாளாக நீடிப்பு
x
தினத்தந்தி 27 Jun 2025 8:18 AM IST (Updated: 27 Jun 2025 11:48 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றால அருவிகள் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த 24ம் தேதி முதல் குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் தொடர்ந்து இன்று 4வது நாளாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, புலியருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

1 More update

Next Story