சிக்னலை மறைத்து வைக்கப்பட்ட பேனர்

போடியில் சிக்னலை மறைத்து வைக்கப்பட்ட பேனரால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிக்னலை மறைத்து வைக்கப்பட்ட பேனர்
Published on

போடியில், தேனி சாலையில் உள்ள போஜன் பூங்காவில் இருந்து தேரடி தெருவுக்கு செல்லும் வளைவான சாலையில் வாகனங்கள் எதிரெதிரே வருவதை எச்சரிக்கும் வகையில் போக்குவரத்து சிக்னல் உள்ளது. இந்தநிலையில் அந்த சிக்னலை மறைத்து நேற்று பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து சிக்னல் தெரியாமல் வாகனங்கள் வளைவான சாலையில் ஆபத்தான முறையில் கடந்து சென்றன. மேலும் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே போக்குவரத்து சிக்னலை மறைத்து வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரை அகற்றுவதுடன், இதுபோன்று சாலையோரம் பேனர் வைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com