

தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி தூத்துக்குடியில் உள்ள அனைத்து விசைப்படகு மீனவர்களும் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. சில நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்குச் சென்றனர்.