மாடுகளை ஏற்றி சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்திய பா.ஜ.க. பிரமுகர்..!

விருத்தாசலத்தில் மாடுகளை ஏற்றி சென்ற வாகனத்தை பாஜக பிரமுகர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மாடுகளை ஏற்றி சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்திய பா.ஜ.க. பிரமுகர்..!
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகே உள்ள எம்.அகரம் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 47). மாடு விற்பனை வியாபாரி. பழனி திட்டக்குடி மாட்டு சந்தையில் 7 மாடுகளை வாங்கி கொண்டு குட்டி யானை வாகனத்தில் ஏற்றி வந்துள்ளார்.

அப்போது விருத்தாசலம் கடைவீதி வழியாக வாகனம் வந்தபோது பா.ஜ.க. பிரமுகர் ஒருவர் வாகனத்தை தடுத்து நிறுத்தி உள்ளார்.

மேலும் மாடுகளை இறைச்சிக்கு பயன்படுத்துவதற்காக கொண்டு செல்கிறீர்களா? என்று பழனி மற்றும் அவருடன் வந்தவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அவருக்கு பழனிக்கு சிறிது நேரம் வாக்குவாதம் நடந்து உள்ளது.

பின்னர் மாடுகளை கோ-சாலை அல்லது கோவிலில் கொண்டு விடுமாறு கூறிவிட்டு அங்கிருந்து அந்த பா.ஜ.க. பிரமுகர் சென்று விட்டார்.

இதனை அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்குவந்து மாடு வியாபாரி பழனியிடம் விசாரணை நடத்தினர். அப்போது பழனி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது பாஜக பிரமுகருக்கு ஆதரவாக அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் திரண்டதால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com