தலைவர் பதவிக்கான தேர்தலில் குமரியில் 8 பேரூராட்சிகளை பா.ஜனதா கைப்பற்றியது

தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் குமரியில் 8 பேரூராட்சிகளை பா.ஜனதா கைப்பற்றியது. இரணியலில் குலுக்கல் முறையில் வெற்றி பெற்றது.
தலைவர் பதவிக்கான தேர்தலில் குமரியில் 8 பேரூராட்சிகளை பா.ஜனதா கைப்பற்றியது
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக அதிக வார்டுகளை கைப்பற்றி 2-வது இடத்தை பிடித்திருந்தது.

இந்தநிலையில் நேற்று தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்தது. இதில் குமரி மாவட்டத்தில் மட்டும் 8 பேரூராட்சிகளில் பா.ஜ.க. வெற்றி வாகை சூடி உள்ளது.

அதாவது இரணியல், இடைக்கோடு, கணபதிபுரம், மண்டைக்காடு, புதுக்கடை, தென்தாமரைக்குளம், வில்லுக்குறி, வெள்ளிமலை ஆகிய 8 பேரூராட்சிகளை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது.

இடைக்கோடு, தென்தாமரைக்குளம் பேரூராட்சிகளில் காங்கிரஸ், அ.தி.மு.க. ஆதரவுடன் தலைவர் பதவியை பா.ஜனதா வென்றது குறிப்பிடத்தக்கது.

குலுக்கல் முறையில்...

இரணியல் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் பா.ஜ.க. 12 இடங்களையும், சுயேச்சை 3 இடங்களையும் கைப்பற்றியிருந்தது. நேற்று நடந்த தலைவர் பதவிக்கான தேர்தலில் பா.ஜ.க.வை சேர்ந்த ஸ்ரீகலா, அதே கட்சியை சேர்ந்த போட்டி வேட்பாளர் கீதா ஆகியோர் போட்டியிட்டனர்.

2 வேட்பாளர்களுக்கும் தலா 7 கவுன்சிலர்களின் ஓட்டுகள் விழுந்தன. ஒரு கவுன்சிலரின் வாக்கு சீட்டில் யாருக்கும் டிக் பண்ணாமல் வெற்று தாளாக இருந்தது. இதனால் அது செல்லாத ஓட்டாக கருதப்பட்டது. இதனையடுத்து குலுக்கல் முறையில் தலைவர் யார்? என தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. இதில் ஸ்ரீகலா வெற்றி பெற்றார். ஸ்ரீகலா தான் பா.ஜ.க.வின் தலைமை வேட்பாளராக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com