உஸ்பெகிஸ்தான் நாட்டில் இறந்த தொழிலாளியின் உடல் திருச்சி வந்தது

உஸ்பெகிஸ்தான் நாட்டில் இறந்த தொழிலாளியின் உடல் திருச்சி வந்தது
உஸ்பெகிஸ்தான் நாட்டில் இறந்த தொழிலாளியின் உடல் திருச்சி வந்தது
Published on

திருவெறும்பூர் அருகே உள்ள சின்ன சூரியூரை சேர்ந்தவர் திருப்பதி (வயது 42). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு கம்பி கட்டும் கூலி வேலைக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 12-ந்தேதி அங்கு இறந்தார். இதனையடுத்து அவரது உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழியிடம் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கலெக்டர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் திருப்பதியின் உடலை கொண்டுவர வலியுறுத்தினார். இதனையடுத்து அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் திருப்பதியின் உடல் விமானம் மூலம் உஸ்பெகிஸ்தான் நாட்டில் இருந்து சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. அதன்பின் அங்கு இருந்து ஆம்புலன்ஸ் மூலம் நேற்று காலை 5 மணி அளவில் சின்னசூரியூரில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே திருப்பதியின் தந்தை பெரியசாமி வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்று இறந்துபோன தனது மகனின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com