கிணற்றில் அழுகிய நிலையில் மிதந்த வாலிபர் பிணம்

கிணற்றில் அழுகிய நிலையில் மிதந்த வாலிபர் பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் அழுகிய நிலையில் மிதந்த வாலிபர் பிணம்
Published on

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, திம்மூர் கிராமத்தில் பச்சமுத்து என்பவருக்கு சொந்தமான வயலில் உள்ள கிணற்றில நேற்று மாலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருந்தது. இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இருந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?, அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com