தண்டவாளத்தில் வாலிபர் பிணம்

தண்டவாளத்தில் வாலிபர் பிணம் கிடந்தது.
தண்டவாளத்தில் வாலிபர் பிணம்
Published on

காரைக்குடி, 

காரைக்குடி ரயில்வே போலீஸ் சரகத்திற்குட்பட்ட தேவகோட்டை ரஸ்தாவிற்கும் கல்லலுக்கும் இடையே ரெயிலில் அடிபட்ட நிலையில் வாலிபர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த ரயில்வே போலீஸ் சப்-இன்ஸபெக்டர் சவுதாமா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இறந்தவர் திருமயம் தாலுகா அரிமளத்தை சேர்ந்த ராம்குமார் (வயது 28) என்பது தெரியவந்தது. அவர் ஏன் அங்கு வந்தார்? ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com