விபத்தில் இறந்த வாலிபர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது

கனடாவில் விபத்தில் இறந்த வாலிபர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
விபத்தில் இறந்த வாலிபர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள வீரசிகாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்-கோமதி தம்பதி மகன் பிரகாஷ் (வயது 28). இவருக்கு திருமணம் ஆகி இந்துமதி என்ற மனைவியும், 1 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கனடாவில் உள்ள தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது மனைவி, குழந்தையுடன் அங்கு வசித்து வந்துள்ளார். கடந்த 3-ந் தேதி கனடாவில் நடந்த விபத்தில் பிரகாஷ் பலியானார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலையில் பிரகாஷ் உடல் சொந்த ஊரான வீரசிகாமணிக்கு கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளரும், சங்கரன்கோவில் யூனியன் சேர்மனுமாக லாலா சங்கரபாண்டியன், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, விவேகானந்தா பள்ளி தாளாளர் கல்யாணசுந்தரம், சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன் மற்றும் குடும்பத்தினர், ஊர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com