உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

வேளாங்கண்ணி அருகே வாலிபர் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் வந்ததால் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
Published on

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி அருகே வாலிபர் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் வந்ததால் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வயலில் பிணமாக கிடந்தார்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கீழப்பிடாகை ஊராட்சி சிந்தாமணி நடுத்தெருவைச் சேர்ந்தவர் கலைவாணன். இவருடைய மகன் சூர்யா (வயது 20). கூலி தொழிலாளி. இவர் கடந்த 21-ந்தேதி அருகில் காமேஸ்வரம் பகுதியில் உள்ள அவரது தாத்தா பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்றுள்ளார்.

மறுநாள் காமேஸ்வரத்தில் உள்ள பன்னீர்செல்வத்தின் வயலுக்கு சென்ற சூர்யா, அங்கு பிணமாக கிடந்துள்ளார். இதை தொடர்ந்து அரவது உடலை, பன்னீர்செல்வம் மற்றும் உறவினர்கள் சிந்தாமணிக்கு கொண்டு வந்து அங்கு உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்து உள்ளனர்.

உடல் தோண்டு எடுப்பு

இந்த நிலையில் சூர்யாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது சித்தப்பா கார்த்திகேயன் (46) என்பவர் கீழையூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ்குமார், கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி, கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத் ஆகியோர் முன்னிலையில் பொக்லின் எந்திரம் மூலம் சூர்யாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பரபரப்பு

மேலும் இதுதொடர்பாக கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். வாலிபர் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் வந்ததால் உடல் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com