காமங்கலத்தில் பாம்பு கடித்து சிறுவன் சாவு

காமங்கலத்தில் பாம்பு கடித்து சிறுவன் சாவு
Published on

காரிமங்கலம்

காரிமங்கலம் அடுத்த முரசுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் சந்துரு (வயது 5). இந்த நிலையில் சந்துரு வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தான். அப்போது பாம்பு சிறுவனை கடித்தது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த மணிகன்டன் மகனை பாம்பு கடித்ததை அறிந்து தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் சந்துரு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com