உல்லாசமாக இருக்க காதலியை புதுச்சேரிக்கு அழைத்து சென்ற காதலன்...விடுதியில் காத்திருந்த நண்பன்.. அடுத்து நடந்த சம்பவம்


உல்லாசமாக இருக்க காதலியை புதுச்சேரிக்கு அழைத்து சென்ற காதலன்...விடுதியில் காத்திருந்த நண்பன்.. அடுத்து நடந்த சம்பவம்
x
தினத்தந்தி 23 Sept 2025 9:21 PM IST (Updated: 23 Sept 2025 9:27 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த நிலையில், ஆரோவில் பகுதியில் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்குவதற்கு சென்றனர்.

சென்னை,

சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் 31 வயது பெண். இவருக்கும் வேளச்சேரி பகுதியில் உள்ள மாலில் வேலை செய்யும் நிரூபன் (29) என்பவருடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்தனர். இருவரும் அவ்வபோது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

இந்தநிலையில் வார இறுதிநாளை கொண்டாடவும் உல்லாசமாக இருக்கவும் புதுச்சேரிக்கு செல்லலாம் என்று நிரூபன் அந்த பெண்ணிடம் கூறினார். காதலனை நம்பி அந்த பெண் புதுச்சேரிக்கு வந்தார். அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த நிலையில், ஆரோவில் பகுதியில் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்குவதற்கு சென்றனர்.

அப்போது தனது நண்பருடன் உல்லாசமாக இருக்குமாறு நிரூபன் அந்த பெண்ணிடம் வற்புறுத்தினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண், அதற்கு மறுத்துவிட்டார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நிரூபன் அந்த பெண்ணை தரக்குறைவாக திட்டி, தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர், அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து ஆரோவில் போலீசில் அந்த பெண் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிரூபனை வலைவீசி தேடி வருகின்றனர்.

1 More update

Next Story