பிளஸ்-2 மாணவியை நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்ற காதலன்... தூத்துக்குடி அருகே பரபரப்பு

மோட்டார் சைக்கிளில் காதலன் பிளஸ்-2 மாணவியை அழைத்து கொண்டு காட்டு பகுதிக்கு சென்றார்.
பிளஸ்-2 மாணவியை நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்ற காதலன்... தூத்துக்குடி அருகே பரபரப்பு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஆத்திக்காடு கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருள்ராஜ். இவருடைய மகன் சஞ்சய் (வயது 19). பெயிண்டரான இவர் பிளஸ்-2 மாணவியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பழகி வந்தார். சம்பவத்தன்று சஞ்சய் மோட்டார் சைக்கிளில் பிளஸ்-2 மாணவியை அழைத்து கொண்டு ஆத்திகாடு கருமேனி ஆற்றங்கரை காட்டு பகுதிக்கு சென்றார்.

பின்னர் அவர் தன்னுடன் பெயிண்டர் வேலைக்கு வரும் நண்பர்களான நாசரேத் அருகே கச்சனாவிளை முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த திருமணி மகன் உபேஷ் தர்மா (21), உடன்குடி முத்துநகரைச் சேர்ந்த சக்திவேல் மகன் முத்தரசன் (18) ஆகியோரை செல்போனில் தொடர்பு கொண்டு அங்கு வருமாறு அழைத்தார். அதன்படி அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர்.

காட்டு பகுதியில் 3 வாலிபர்களுடன் பிளஸ்-2 மாணவி தனியாக இருப்பதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவர்களை மடக்கினர். அப்போது காட்டு பகுதிக்கு மாணவியை அழைத்து சென்று உல்லாசமாக இருக்க முயன்றதும், மேலும் காதலியை நண்பர்களுக்கும் விருந்தாக்க முயன்றதும் தெரியவந்தது. தங்களிடம் சிக்கிய 3 வாலிபர்களையும், மாணவியையும் பொதுமக்கள் மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.

இதுதொடர் பாக மாணவியின் பெற்றோர் சாத்தான்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதன்பே ரில், சஞ்சய், உபேஷ் தர்மா, முத்தரசன் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் 3 பேரையும் சாத்தான்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். பிளஸ்-2 மாணவியை காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்று நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com