கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த கொடூரம்.. வாலிபரை கடத்தி கழுத்தை அறுத்து வாய்க்காலில் வீசி வெறிச்செயல்

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை கடத்தி கழுத்தை அறுத்து கொலை செய்து உடலை வாய்க்காலில் வீசி சென்றனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த கொடூரம்.. வாலிபரை கடத்தி கழுத்தை அறுத்து வாய்க்காலில் வீசி வெறிச்செயல்
Published on

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மேல குத்தவக்கரையை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் லட்சுமணன் (வயது 35). இவருடைய மனைவி அஞ்சலி(28). இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

கொள்ளிடம் பகுதியை சேர்ந்தவர் ராஜா என்கிற ராமச்சந்திரன். இவருக்கு சசிகலா, சத்யா என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். ராஜாவும், லட்சுமணனும் உறவினர்கள். தனது தந்தையின் வீட்டிற்கு அருகே ராஜா வசித்து வந்ததால் லட்சுமணன் அங்கு அடிக்கடி சென்று வருவார். அப்போது ராஜாவின் 2 மனைவிகளுடன் லட்சுமணனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் ராஜாவின் 2 மனைவிகளுடன், லட்சுமணனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதை அறிந்த ராஜா, லட்சுமணனிடம் தனது மனைவிகளுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பை வெளியே சொல்லாமல் இருக்க அவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. பணம் தராவிட்டால் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து விடுவதாகவும் லட்சுமணனை, ராஜா மிரட்டியதாக தெரிகிறது. ராஜாவின் மிரட்டலுக்கு பயந்து லட்சுமணன், சென்னை ஆவடி பகுதியில் தலைமறைவாக வசித்து வந்துள்ளார்.

ராஜா மற்றும் அவரது நண்பர்கள் லட்சுமணனை பல மாதங்களாக தேடி வந்தனர். அவரை கண்டுபிடிக்க முடியாததால் ராஜா மற்றும் அவரது நண்பர்கள், லட்சுமணனின் மனைவி அஞ்சலியை சந்தித்து உனது கணவர் இருக்கும் இடம் எங்கே? என்று கேட்டு மிரட்டியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை கொள்ளிடம் அருகே தெற்கு ராஜன் வாய்க்காலில் லட்சுமணன் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆணைக்காரன் சத்திரம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. ராஜா மற்றும் அவரது நண்பர் வல்லம்படுகையை சேர்ந்த ராகுல் உள்பட 4 பேர் கொண்ட கும்பல் லட்சுமணன் சென்னை ஆவடியில் இருப்பதை தெரிந்து கொண்டு அங்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற அவர்கள், லட்சுமணனை கொள்ளிடத்திற்கு கடத்தி வந்துள்ளனர். பின்னர் அவரை அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்து உடலை அருகில் உள்ள தெற்குராஜன் வாய்க்காலில் வீசி சென்றுள்ளனர்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக ஆணைக்காரன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ராஜா மற்றும் அவரது நண்பர் ராகுல் உள்பட 4 பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com