குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்

குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்
Published on

ஊட்டி, 

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட 32-வது வார்டு நொண்டிமேடு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பள்ளிவாசல் சாலை வழியாக சவுத்விக் பகுதிக்கு செல்ல சாலை உள்ளது. அந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருக்கிறது. இதுவரை அப்பகுதிக்கு தார் சாலை அமைத்து தரவில்லை. இதனால் அவசர தேவைக்கு கூட சாலையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் 108 ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. மேலும் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் கடும் அவதி அடைகின்றனர். எனவே, குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com