குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்

குத்தாலம் அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்
Published on

குத்தாலம்:

குத்தாலம் ஒன்றியம் கோமல் ஊராட்சி செம்பியன்கோமல் முதல் உக்கடை வரை தார்ச்சாலை உள்ளது. தற்போது இந்த சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com