

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ராஜபாளையம் தம்பா பிள்ளை தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் ராஜா (வயது 60). தொழிலதிபரான இவர் வேலை சம்பந்தமாக கொடைக்கானல் சென்று விட்டு ராஜபாளையத்திற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வரும் போது கார் மரத்தில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து அவரது மகன் பிருத்திவி ராஜன் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் காரை ஓட்டி வந்த ராஜபாளையத்தை சேர்ந்த டிரைவர் சஞ்சீவ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.