தவெகவின் சிறப்பான ஆட்சிக்கு இடைதேர்தல் ஒரு எடுத்துக்காட்டு - செங்கோட்டையன்

மக்கள் கோரிக்கை எதுவாக இருந்தாலும் இரவு பகல் பாராது அயராது நாங்கள் உழைப்போம் என செங்கோட்டையன் பேசியுள்ளார்.
sengotayan interview
Published on: 

சென்னை,

தவெகவின் சிறப்பான ஆட்சிக்கு இடைதேர்தல் ஒரு எடுத்துக்காட்டு என செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இன்று நடைபெற்று வரும் இடைதேர்தலில் தவெக வேட்பாளரான சத்தியபாமா மற்றும் மரகதம் குமரவேல் போட்டியிட்ட தொகுதிகளில் இருவரும் வெற்றிப் பெற்றுள்ளனர். இந்த நிலையில் இது குறித்து தவெகவின் தலைமை ஒருங்கிணைப்பாளரான செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இன்று 10 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர். ஆகவே, தமிழக மக்களை பொறுத்த வரை முதல்-அமைச்சர் விஜய்யை வாழ்த்துகிறார்கள், பாராட்டுகிறார். மேலும், அவருடைய ஆட்சி சிறப்பான ஆட்சி என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை மாற்றுகட்சியை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்வார்கள். தமிழக வெற்றி கழகத்தின் தலைவருக்கு பின்னால் நாடே இருக்கிறது. நாட்டு மக்கள் அவரை முழுமையாக நம்புகிறார்கள்.

“வெற்றி மீது வெற்றி வந்து நம்மை சேரும் அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் நம்முடைய வெற்றி தளபதியை சாரும்” மக்கள் கோரிக்கை எதுவாக இருந்தாலும் இரவு பகல் பாராது அயராது நாங்கள் உழைப்போம். நம்முடைய வெற்றி தளபதி எத்தனை தேர்தலில் போட்டியிட்டாலும் அது எல்லாம் வெற்றி பெற்று நிரந்தர முதல் அமைச்சராக இருப்பார். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com