

சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த 7-ந் தேதியன்று பதவி ஏற்றுக்கொண்டது.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று தொடங்கியது. சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிது. இந்தஆலோசனை கூட்டத்தில் 33 அமைச்சாகளும் பங்கேற்றுள்ளனா.
கொரோனா பரவல் கட்டுப்பாடுகள், மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக எழுந்துள்ள அவசர நிலை உள்ளிட்ட அம்சங்களும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது
இந்த ஆட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடும் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும்.