முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் நிறைவு..!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் நிறைவு பெற்றுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் நிறைவு..!
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி வருகிற 7-ந் தேதி 2-ம் ஆண்டை நிறைவு செய்து 3-ம் ஆண்டை தொடங்குகிறது.

இந்த சூழலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவையின் 12-வது கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கியறது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் தற்போது நிறைவு பெற்றுள்ளது.

சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நடந்த ஆலோசனையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் துறை வாரியாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை, செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்தும் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ள வெளிநாட்டு பயணங்கள் குறித்தும் ஆலோசனை ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com