தூத்துக்குடியில் ரோட்டில் சென்ற போது கார் தீப்பிடித்ததால் பரபரப்பு

தூத்துக்குடியில் ரோட்டில் சென்ற போது கார் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் ரோட்டில் சென்ற போது கார் தீப்பிடித்ததால் பரபரப்பு
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி முத்தையாபுரம் அபிராமிநகரை சேர்ந்தவர் இளங்குமரன். சிவில் என்ஜினீயர். இவர் நேற்று மாலையில் தனது மனைவி மற்றும் உறவினர்கள் உள்பட 4 பேருடன் தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள ரோச் பூங்காவுக்கு சென்றாராம். அங்கு இருந்து மீண்டும் தூத்துக்குடி நோக்கி வந்து உள்ளார்.

அவர்கள் தெற்கு காட்டன் ரோடு பகுதியில் வந்து கொண்டு இருந்த போது திடீரென காரில் இருந்து புகை வந்து உள்ளது. இதனை பார்த்த இளங்குமரன் காரை நிறுத்தி கீழே இறங்கி உள்ளார். காரில் இருந்த 4 பேரை உடனடியாக இறங்கினர். இந்த நிலையில் கார் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இது தொடர்பாக தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தினர். காரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தொடர்ந்து பேரீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரோட்டில் சென்று கொண்டு இருந்த போது திடீரென கார் தீப்பிடித்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com