சிறுபாக்கம் அருகே2 கார்கள் நேருக்கு நேர் மோதல்; பெண் பலி6 பேர் படுகாயம்

சிறுபாக்கம் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் இறந்தார். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.
சிறுபாக்கம் அருகே2 கார்கள் நேருக்கு நேர் மோதல்; பெண் பலி6 பேர் படுகாயம்
Published on

சிறுபாக்கம்,

நாமக்கல் மாவட்டம், முட்டுகாடு பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 39). இவர், நேற்று தனது குடும்பத்துடன், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கொரக்கையில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.

பின்னர், அங்கிருந்து காரில் வீட்டுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். மாலை 6 மணியளவில் சிறுபாக்கம் அடுத்த ரெட்டாக்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே வந்தனர். அப்போது எதிரே மற்றொரு கார் வந்து கொண்டிருந்தது. திடீரென இருகார்களும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது.

பெண் சாவு

அதில், காரில் பயணித்த வாசுதேவன் மனைவி அருணா (32) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், காரில் பயணித்த வாசுதேவன், அவரது உறவினர்கள் அங்கம்மாள் (70), பிரத்திகன் (10), கவின் (8) ஆகியோர் காயமடைந்தனர்.

அதேபோன்று, எதிரே வந்த காரில் பயணித்த வடலூரை சேர்ந்த கார்த்திகேயன் (45), அவரது மனைவி ராதிகா (42) ஆகியோரும் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இது குறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com