ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்துள்ள வழக்கு செல்லாததாகிவிட்டது... சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி பதில்மனு

அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் பதில்மனு தக்கல் செய்துள்ளார்.
ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்துள்ள வழக்கு செல்லாததாகிவிட்டது... சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி பதில்மனு
Published on

சென்னை,

கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்துசெய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், இந்த வழக்கை தொடுத்துள்ள மனோஜ் பாண்டியன் கட்சியின் உறுப்பினரே இல்லை என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டுவருவதும், ஒற்றைத்தலைமைக்கு மாறுவதும் தொண்டர்கள் மற்றும் பொதுக்குழுவின் விருப்பமாகும். கட்சி விதிகளில் மாற்றம் செய்ய பொதுக்குழுவிற்கு மட்டுமே உள்ள அதிகாரத்தை மனுதாரர் கேள்வி கேட்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற வகையில் சட்ட ஆணையம் தனக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், ஜி20 மாநாட்டிற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் பதில் மனுவில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு இருக்கிறார்.

தனிப்பட்ட சங்க விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது என்பதால், உள்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடும்படி மனுதாரர் கோரமுடியாது. பெரும்பான்மையினர் முடிவை சிறுபான்மையினர் முடக்க முடியாது.

பொதுக்குழு தீர்மானங்கள் அமலுக்கு வந்து 8 மாதங்களுக்கு பிறகு மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த வழக்கு செல்லாததாகிவிட்டது. எனவே அபராதத்துடன் தள்ளுபடிசெய்யவேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில்மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நாளை விசாரனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com