முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்கில் வருமானவரித்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு..,!

வருமானவரித்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்கில் வருமானவரித்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு..,!
Published on

சென்னை,

வருமான வரித்துறை நடவடிக்கையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்ந்த வழக்கில் , வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

2016 சட்டமன்ற தேர்தலின் போது ரூ.7 கோடியை சேகர் ரெட்டியின் நிறுவனத்துக்கு வழங்கியதாக வேலுமணி மீது வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டது .

2017-18ம் நிதியாண்டில் வேலுமணியின் வருமானம் ரூ.7.04 கோடி என நிர்ணயித்து வருமான வரித்துறை உத்உத்தரவிட்டது .

இந்த நிலையில் வருமான வரித்துறை நோட்டீசை ரத்து செய்யவும், தடை விதிக்கவும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

வழக்கில் வருமானவரித்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது .மேலும் ,வேலுமணி மனு மீதான விசாரணை பிப்ரவரி 27ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது .

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com