தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்; நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறினார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்; நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி
Published on

சீமான் பேட்டி

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நேற்று முன்தினம் தூத்துக்குடி விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா கட்சி தென்மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களை கைப்பற்ற குறிவைத்து வருகிறது. அதில் முதலில் புதுச்சேரியை கைப்பற்ற நினைக்கிறது. இதற்காக தான் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை கிரண்பெடியை வைத்து இதுவரை செயல்படவிடாமல் தடுத்து வந்தனர். தற்போது, கிரண்பெடியை மாற்றி தமிழிசை சவுந்தரராஜனை கொண்டு வந்து எப்படியாவது பா. ஜனதா ஆட்சி அமைக்க நினைக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கும் பா. ஜனதா கட்சிக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. கட்சிதான் வெவ்வேறு. ஆனால் கொள்கை ஒன்றுதான். கட்சி கொள்கை, வெளியுறவு கொள்கை, பொருளாதர கொள்கை, பாதுகாப்பு கொள்கை எல்லாவற்றிலும் 2 கட்சியும் ஒன்று தான்.

வழக்குகளை வாபஸ் பெற...

இந்தியாவை ஆளக்கூடிய பெரிய கட்சியான பா. ஜனதா கட்சியானது தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை போல் தனித்து போட்டியிடுமா?. வேண்டுமானால் திராவிட கட்சிகள் தோளில் ஏறிக்கொண்டு வரும், அதான் நடக்கும். தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற வேண்டும் தமிழக முதல்-அமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதே போன்று கலவரத்தில் நாம் தமிழர் கட்சியினர் மீதுதான் அதிக வழக்குகள் போடப்பட்டது. எனவே அதனை தமிழக முதல்-அமைச்சர் வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com