செல்போன் கோபுரம் முறிந்து விழுந்தது

மாஞ்சோலையில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழைக்கு செல்போன் கோபுரம் முறிந்து விழுந்தது.
செல்போன் கோபுரம் முறிந்து விழுந்தது
Published on

அம்பை:

மாஞ்சோலையில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழைக்கு செல்போன் கோபுரம் முறிந்து விழுந்தது. 

சூறைக்காற்றுடன் மழை

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையை ஒட்டி மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட தேயிலை தோட்டங்கள் உள்ளன. இங்கு 800-க்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடும்பமாக தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மாஞ்சோலை ஊத்து தேயிலை தோட்ட பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் முறிந்து அங்குள்ள ஒரு கட்டிடத்தின் மீது விழுந்தது. இதனால் செல்போன் கோபுரம் சேதமடைந்ததால், அப்பகுதியில் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டது.

தொழிலாளர்கள் கோரிக்கை

இதன் காரணமாக பள்ளி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் செல்போனில் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே, செல்போன் கோபுரத்தை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு ராட்சத மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அதை தேயிலை தாட்ட தொழிலாளர்களே அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com