"டெல்லியில் மைய்யம் கொண்டது மய்யம்..."- எம்.பி கமல்ஹாசனுக்கு சினேகன் வாழ்த்து

எம்.பி கமல்ஹாசனுக்கு திரையிலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மாநிலங்களவையில் 6 தமிழ்நாட்டு எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. இதையடுத்து, புதிதாக 6 எம்.பிக்கள் பொறுப்பேற்றுள்ளனர். அதில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் திமுக சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் நேற்று பதவியேற்றார்.
அவருக்கு, திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியும், திரைப்படங்களுக்கு பாடல் எழுதும் கவிஞருமான சினேகன் எம்.பி கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "டெல்லியில் மைய்யம் கொண்டது மய்யம்...இனி ஒன்றிய மன்றத்தில் ஓங்கி ஒலிக்கும் மக்களின் குரலாக மய்யத்தின் குரல் ... மாநிலங்களவையில் பொறுப்பேற்றிருக்கும் நம்மவருக்கு வாழ்த்துகள்". என்று பதிவிட்டுள்ளார்.






