வெறும் கையால் முழம் போடுவோம் என்கிறது மத்திய பாஜக அரசு - பெ. சண்முகம் விமர்சனம்

“கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக” என்றார் வள்ளலார்.
பெ. சண்முகம்
Published on

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

ஜுலை 1 முதல் கிராமப்புற மக்களுக்கு 125 நாட்கள் வேலை வழங்கப்போவதாக ஆரவாரமாக அறிவித்துள்ளது ,மத்திய அரசு. வெற்று ஆரவாரங்களால் வேலை கொடுக்க முடியாது. அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக

ஆனால், “வெறும் கையால் முழம் போடுவோம்” என்கிறது மத்திய பாஜக அரசு. ஏழைகளை ஏமாற்றுவதும், அவர்களுக்கு எதிராகச் செயல்படுவதும்தான் பாஜகவின் கொள்கை. “கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக” என்றார் வள்ளலார். ஒன்றுபடுவோம், போராடுவோம், வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com